தென்கொரியாவில் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை


தென்கொரியாவில் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை
x
தினத்தந்தி 28 Aug 2025 6:15 AM IST (Updated: 28 Aug 2025 12:03 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை

சியோல்,

தென்கொரியாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.

இந்தநிலையில் பள்ளியில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இங் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்கான மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென்கொரியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story