அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியது தென்கொரிய வங்கி

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடு என்ற பெயரை தென்கொரியா பெறுகிறது.
அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியது தென்கொரிய வங்கி
Published on

சியோல்,

தென்கொரியாவில் கடந்த ஜூன் மாதம் வரை கொரோனா தொற்று குறைந்த அளவில் பதிவாகி வந்தது. இந்த நிலையில் அங்கு கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 1,800-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் அங்கு நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரிய வங்கி தனது அடிப்படை வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடு என்ற பெயரை தென்கொரியா பெறுகிறது.

இது குறித்து கொரிய வங்கியின் கவர்னர் லீ ஜுயியோல் கூறுகையில், வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவு ஒருமனதாக ஏற்கப்படவில்லை. விகிதங்கள் நிலையானதாக இருக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். இது குறித்து ஆய்வாளர்களிடையே நடத்தப்பட்ட கருத்து கேட்பின் போது, 30 இல் 16 பேர் மட்டுமே விகித உயர்வை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com