ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் பேச்சு; கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ஒப்புதல்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்; தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்; தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்
Published on

இதுகுறித்து மூன் ஜே இன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், இப்போதுதான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஒரு பெரிய உரையாடலை நடத்தினேன். கொரோனாவின் உலகளாவிய சவால்களுக்கு, பருவநிலை மாற்ற பிரச்சினைகளுக்கு, பொருளாதார பின்னடைவுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் புதிய ஆட்சியை வரவேற்றேனன என கூறி உள்ளார்.

மேலும், தென்கொரியா, அமெரிக்கா கூட்டணியை மேலும் மேம்படுத்தவும் நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் நாங்கள் ஒன்றிணைந்து பாடுபடுவோம் எனவும் கூறி உள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மூன்ஜே இன் பின்னணியில் இருந்தார். ஆனால் இரண்டாவது சந்திப்புக்கு பின்னர் அந்த பேச்சுவார்த்தை தொடரவில்லை.

இந்தநிலையில் மீண்டும் அமெரிக்காவும், வடகொரியாவும் பேச்சு நடத்தவேண்டும் என்பது மூன் ஜே இன் விரும்புகிறார். எனவே அவர் ஜோ பைடனுடன் நடத்திய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com