ஜப்பான் அருகே தென் கொரிய சரக்கு கப்பல் மூழ்கியது- 7 பேர் மாயம்

ஜப்பான் அருகே தென் கொரிய சரக்கு கப்பல் மூழ்கியது- 7 பேர் மாயம்
Published on

டோக்கியோ:

தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது கடலில் மூழ்கியது. கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 4 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். 7 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.

கியோயங் சன் என்ற ரசாயனக் கப்பல் சாய்ந்துகொண்டிருப்பதாகவும், ஜப்பானின் முட்சுர் தீவுக்கு அருகில் தஞ்சம் அடைவதாகவும் தகவல் வந்ததன் அடிப்படையில் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

அந்த கப்பலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர், தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேர், சீனாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 ஊழியர்கள் பயணித்ததாக என்.எச்.கே. தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. கப்பல் எப்படி மூழ்கியது என்ற விவரம் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com