வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை: தென்கொரிய புதிய அதிபர் அழைப்பு

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் லி ஜே மியுங் வெற்றிபெற்றார்.
சியோல்,
தென்கொரியாவில் அதிபராக செயல்பட்ட யூன் சுக் இயோல் கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால அதிபராக ஹான் டக் சூ நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தென்கொரியாவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் லி ஜே மியுங் வெற்றிபெற்றார்.இதையடுத்து அவர் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், அதிபராக பதவியேற்றப்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லி ஜோ மியுங், வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை, வடகொரியா அத்துமீறி செயல்பட்டால் அமெரிக்காவுடனான ராணுவ நட்பு மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story






