ஸ்பேஸ் எக்ஸ் ஏ.ஐ. பெயர் மாற்றம் - எலான் மஸ்க் அறிவிப்பு

ஏ.ஐ. என்பதை விட எஸ்.ஐ. என்ற பெயர் நன்றாக இருக்கிறது என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் ஏ.ஐ. பெயர் மாற்றம் - எலான் மஸ்க் அறிவிப்பு
Published on: 

வாஷிங்டன்,

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பதற்கு பதிலாக, 'Super Intelligence' என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதன்படி, 'Super Intelligence' என்பதை குறிக்கும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு Space XSI என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம், நாம் பெயர் மாற்றம் செய்கிறோம். ஏ.ஐ. என்பதை விட எஸ்.ஐ. என்ற பெயர் நன்றாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com