உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்க தயார் - ஸ்பெயின் அறிவிப்பு..!

ரஷியாவிற்கு தாக்குதலுக்கு எதிராக போராடிவரும் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்க தயாராக உள்ளதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மேட்ரிட்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.மேலும் தொடர்ந்து சண்டையிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.

இந்நிலையில், உக்ரைனுக்கு தேவைப்பட்டால் மேலும் ஆயுதங்கள் வழங்கத்தயாராக உள்ளதாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் அறிவித்துள்ளது.

இது குறித்து ஸ்பெயின் ராணுவ மந்திரி மார்கரிட்டா ரோபிள்ஸ் மேட்ரிட் நகரில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், கிடைக்கும் சாத்தியக்கூறுகளின் எல்லைக்குள் உக்ரைனுக்குத் தேவைப்பட்டால் எங்களிடம் உள்ள தளவாடங்களை நாங்கள் அனுப்புவோம். இது உக்ரைனியர்கள் காட்டும் வீரத்துக்கான பாதுகாப்புக்கு உதவும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com