ஸ்பெயின்: வரி மோசடி வழக்கில் பிரபல பாப் பாடகி ஷகிரா விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டு உத்தரவு!

வரி மோசடி வழக்கில் ஷகிராவை விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெயின்: வரி மோசடி வழக்கில் பிரபல பாப் பாடகி ஷகிரா விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டு உத்தரவு!
Published on

மாட்ரிட்,

கொலம்பிய நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா மீதான வரி மோசடி வழக்கில் ஷகிராவை விசாரணைக்கு ஆஜராக ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

45 வயதான பாடகி ஷகிரா, பார்சிலோனா எப்.சி கால்பந்து கிளப் அணியின் வீரரான ஜெரார்ட் பிக் உடன் வசித்து வந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 2011 முதல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஜூன் மாதம் விவாகரத்து பெறுவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இடையே, பாடகி ஷகிராவால் ஈட்டப்பட்ட வருமானத்திற்கான வரியை அவர் செலுத்தத் தவறியதாக ஸ்பெயின் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

அந்த 2 ஆண்டுகளில், வடக்கு ஸ்பெயினின் பகுதியான கேட்டலோனியாவில் ஷகிரா வசித்து வந்ததாகவும் அதன்படி, அவர் வருமான வரியாக செலுத்த வேண்டிய தொகை 14.5 மில்லியன் யூரோக்கள் (15.54 மில்லியன் டாலர்கள்) என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மறுபுறம், ஷகிராவின் தரப்பில், அவர் 2015 இல் மட்டுமே ஸ்பெயினுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர், அவர் தனது அனைத்து வரியையும் செலுத்தியுள்ளார் எனவும், தன் கடமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர் ஸ்பெயினின் வரி அதிகாரிகளுக்கு 17.2 மில்லியன் யூரோக்களை செலுத்தியுள்ளார் மற்றும் நிலுவையில் உள்ள கடன்கள் எதுவும் இல்லை.இது தொடர்பாக, உறுதியான சட்ட வாதங்களுடன் இந்த வழக்கை வாதிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் தனது சர்வதேச சுற்றுப்பயணத்தின் போது சம்பாதித்த பணத்தை ஸ்பெயின் வழக்கறிஞர்கள் பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஜூலையில் நடந்த விசாரணையில், ஷகிராவுக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனையை கோர்ட்டு வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்நிலையில், வரி மோசடி வழக்கில் ஷகிராவை விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com