நாய்களுக்கு சிறப்பு வகுப்பு

அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
நாய்களுக்கு சிறப்பு வகுப்பு
Published on

குழந்தைகள் பள்ளிக்கு அருகில் இருக்கும் விலங்குகள் பராமரிப்பு நிலையங்களுக்கு சென்று, விலங்குகளுக்கு பாடம் படித்து காட்ட வேண்டுமாம். அதனால் பள்ளிக்குழந்தைகள் தங்களது பாடப்புத்தகங்களுடன் நாய், பூனைகளோடு அமர்ந்து, அவற்றுக்கு பாடம் படித்து காட்டுகிறார்கள்.

வீட்டில் வளர்க்கப்பட்டு பிறகு தனித்துவிடப்பட்ட நாய்கள், பூனைகளுக்காகவே இந்த சிறப்பு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லப்பிராணிகளாக இருந்து தனித்துவிடப்பட்ட விலங்குகளின் தனிமை உணர்வும், மன உளைச்சலும் நீங்கி, அவற்றுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும். அதேசமயம் செல்லப்பிராணிகளிடம் எப்படி நடந்து கொள்வது, அவைகளை எப்படி பராமரிப்பது போன்ற விஷயங்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள் என இந்த சிறப்பு வகுப்பிற்கான காரணம் சொல்கிறார்கள், விலங்குநல ஆர்வலர்கள்.

# படிச்சா எப்படிப்பா டென்சன் குறையும்?

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com