அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு இன்று சிறப்பு விமானங்கள் இயக்கம்

டெல்லி, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு இன்று சிறப்பு விமானங்கள் இயக்கம்
Published on

புஜேரா,

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய முக்கிய விமான நிலையங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வழக்கமான விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை டெல்லி, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு விமானங்களை இயக்குகிறது.

மேலும் கூடுதலாக டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு நாளை மறுநாள் வரை விமானம் இயக்கப்படுகிறது. மஸ்கட்டில் இருந்து இன்று முதல் டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை மற்றும் திருச்சி நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் வழக்கமான விமான சேவை இயக்கப்படுகிறது. இதேபோல புஜேரா சர்வதேச விமான நிலையத்தில் இருந்தும் இந்திய நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com