

வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் முன்னாள் பராக் ஒபாமா புதிதாக வெளியிட்ட தனது அரசியல் நினைவுக் குறிப்பான "ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்" (The Promised Land)என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் குறித்தும் இந்தியாவுடனான தனது நினைவலைகள் குறித்தும் பகிர்ந்து இருக்கிறார். ஒபாமா தனது சுயசரிதையில் கூறியிருப்பதாவது: -
உலகின் மக்கள் தொகையில் ஆறில் பகுதி மக்கள் வாழும் நாடு, 2 ஆயிரத்துக்கும் மேலான தனித்துவமான இனக்குழுக்கள், 700க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கும் நாடு இந்தியா. நான் அதிபராவதற்கு முன்பாக இந்தியா வந்ததில்லை. ஆனால், எப்போதும் என் மனதில் இந்தியாவைப் பற்றி சிறப்பான கற்பனை இருந்தது.
என்னுடைய சிறுவயதின் ஒரு பகுதியை இந்தோனேசியாவில் கழித்தேன். அப்போது இந்துக்களின் இதிகாசங்களான ராமாயணம் , மகாபாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என்னுடன் இந்தியாவைச் சேர்ந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்தார்கள், நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் எனக்கு பருப்பு, கீமா சமைப்பதை கற்றுக் கொடுத்தார்கள். பாலிவுட் திரைப்படங்களை பார்க்கவும் அறிமுகப்படுத்தினார்கள் என்று தெரிவித்துள்ளார்.