

வாஷிங்டன்
அதிபர் டிரம்ப் பிரபல முதலீட்டாளர் அந்தோணி ஸ்காராமுசி என்பவரை தகவல் தொடர்பு இயக்குநராக நியமித்ததை எதிர்த்து ஸ்பைசர் பதவியை விட்டு விலகியதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்பைசர் நேரடியாக அதிபர் டிரம்பிடம் ஸ்காராமுசியின் நியமனம் சரியல்ல என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்று அதிபர் ஸ்பைசரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு கேட்டதாகவும், ஆனால் ஸ்பைசர் அவரிடம் இந்த நியமனம் பெரிய தவறு என்றும், நேரடியாக பங்குச் சந்தையை பற்றி தெரிந்த ஒருவரை நியமிப்பது சரியல்ல என்று கூறியதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது.
சென்ற மே மாதம் அப்போதைய இயக்குநர் மைக் டுப்கே பதவி விலகியதை அடுத்து ஸ்பைசர் இடைக்கால ஏற்பாடாக ஊடக இயக்குநர் பதவியையும் சேர்த்து வகித்து வந்தார்.
வெள்ளை மாளிகை ஊடக செயலராக நியமிக்கப்பட்ட பிறகு ஸ்பைசர் மிகுந்த பிரபலமான பெயராக அமெரிக்க மக்களிடையே விளங்கி வந்தது.