இலங்கை இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் - பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசனை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க அந்நாட்டு அதிபர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
இலங்கை இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் - பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசனை
Published on

கொழும்பு,

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத சூழலில் மக்கள் பலர் அகதிகளாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று மட்டும் 16 இலங்கை தமிழர்கள் இந்தியா வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தற்போது நிலவக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே அனைத்துக்கட்சி கூட்டத்தில் அந்நாட்டி பிரதான எதிர்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com