இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை
Published on

கொழும்பு,

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை நாடுமுழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படப்பட உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வரும் 14 ஆம் தேதி விதிமீறி கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடக பேச்சாளர் மாஅதிபர் அஜித் ரோகன, சுகாதாரத் துறையின் அனுமதியின்றி, சட்ட விரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் அவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com