இலங்கையில் பெண்கள் பயன்பெறும் வகையில் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிச்சலுகை!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சானிட்டரி நாப்கின் மீதான வரியை இலங்கை அரசு குறைத்துள்ளது.
இலங்கையில் பெண்கள் பயன்பெறும் வகையில் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிச்சலுகை!
Published on

கொழும்பு,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சானிட்டரி நாப்கின் மீதான வரியை இலங்கை அரசு குறைத்துள்ளது.

பெண்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை அரசு, பெண்களுக்கான சுகாதாரப் பொருட்கள் மீதான வரிகளை குறைத்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்புக்காக வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஐந்து மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை ரத்து செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கும் வரிச்சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட ஒரு பேக்கின் விலை ரூ.50 முதல் ரூ.60 வரை குறைக்கப்படும். ஒரு பேக்கின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.260 - ரூ.270 ஆக இருக்கும்.

இதன்மூலம், சுகாதாரப் பொருட்களை வாங்க முடியாத பெண்கள் பயன்பெறுவார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com