இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை
Published on

கொழும்பு,

18 தமிழக மீனவர்களை இலங்கை கோர்ட்டு நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் 18 பேரும் நாடு திரும்பும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு செய்து உள்ளது.

விடுவிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களும் இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com