இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம்..!!

இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்வைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்திருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தனா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்குமாறு கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வருகிற 17-ந்தேதி நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் சிறப்பு ஒப்புதல் பெற்று இந்த தீர்மானம் மீது விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதைத்தவிர நாட்டில் நிலையான அரசு அமைக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளும் இந்த கூட்டத்தில் கட்சித்தலைவர்கள் கூறினர். இவற்றை அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என சபாநாயகர் பின்னர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com