காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம்: ரனில் விக்ரமசிங்கே

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம்: ரனில் விக்ரமசிங்கே
Published on

கொழும்பு,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த சூழலில், காஷ்மீர் விவகாரத்தில், உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்கா தெரிவித்து விட்டது.

இதேபோல், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- லடாக்கில் தற்போது 70 சதவீத புத்த மதத்தினர் உள்ளனர். புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள முதல் இந்திய மாநிலமாக (யூனியன் பிரதேசம்) லடாக் மாற உள்ளது. நாம் சுற்றுலா செல்வதற்கு லடாக் அழகான பகுதி. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com