இலங்கை: பேச்சுவார்த்தைக்காக 41 எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச

தனித்து செயல்படுவதாக அறிவித்த 41 உறுப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக உள்ளது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெருமுனை முன்னணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 145 ஆகும்.

இதில் ஆளும் கட்சியை சேர்ந்த 41 உறுப்பினர்கள் தனித்து செயல்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தனர். இந்த நிலையில், தனித்து செயல்படுவதாக அறிவித்த 41 உறுப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இடைக்கால அரசு அமைக்க 41 பேரும் கோரிய நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். அதிபரிடம் பேச்சுவார்த்தைக்கு பிறகு 41 உறுப்பினர்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், பதவியை தக்கவைக்க கோட்டாபய ராஜபக்ச முயற்சி செய்வதாக கூறப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com