இலங்கை சிறையில் கலவரம்: 25 பேர் உயிரிழப்பு

கலவரத்தைத் தொடர்ந்து, சிறை முன் கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை சிறை
Published on

கொழும்பு,

கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 2 காவல் அதிகாரிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

மோதல்

சிறையில் இரு குழுக்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்துள்ளது.

துப்பாக்கி சத்தம்

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கியை பயன்படுத்திய சத்தம் சிறைச்சாலையின் வெளியில் கேட்டதாகவும் கூறப்படுகிறது. கலவரத்தைத் தொடர்ந்து, சிறை முன் கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com