இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது -சுப்ரீம் கோர்ட்

இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது -சுப்ரீம் கோர்ட்
Published on

கொழும்பு

கடந்த மாதம் 9-ம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com