அமெரிக்க போர்க்கப்பலால் கொல்லப்பட்ட 84 மாலுமிகளின் உடல்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தது இலங்கை

இலங்கை நீதிமன்ற உத்தரவின்படி, உடல்கள் தேசிய மருத்துவமனையிலிருந்து ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது
அமெரிக்க போர்க்கப்பலால் கொல்லப்பட்ட 84  மாலுமிகளின் உடல்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தது இலங்கை
Published on

கொழும்பு,

இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற கூட்டுப்பயிற்சி வங்காளவிரிகுடா கடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பலும் பங்கேற்றது.

ஈரான் போர் கப்பல் இலங்கையின் கலி நகர் அருகே இந்திய பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஈரான் போர் கப்பலை குறிவைத்து அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் போர் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

அதேவேளை, போர் கப்பலில் இருந்தவர்கள் உதவிகேட்டு அவசர அழைப்பு விடுத்தனர். இது குறித்து அறிந்த இலங்கை கடற்படையினர், விமானப்படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 32 பேரை உயிருடன் மீட்டனர். இந்நிலையில், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் போர் கப்பலில் பயணித்தவர்களில் 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

ஈரானில் போர் சுழல் சீரடையும் வரை உடல்கள் இலங்கையிலேயே வைக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் முன்னதாகவே கூறியிருந்தது. பிணவறை வசதி போதாததால், இரண்டு பெரிய குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டு, அதில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 84 ஈரானியர்களின் உடல்களை அழுகிவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். சட்ட சிக்கல்களைத் தவிர்க்கவும், உடல்களை உடனடியாக ஈரானியத் தூதரகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஈரான் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து சடலங்களை ஈரானிய தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு மருத்துவமனையின் இயக்குநருக்கு காலி தலைமை நீதிபதி சமீர தொடங்கொட உத்தரவிட்டார்.

இதனையடுத்து உயிரிழந்த 84 பேரின் உடல்கள், ஈரானிய தூதரகத்தின் உதவியுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் விமானம் மூலம் உடல்களை ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com