

கொழும்பு,
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனித பீட்டர் சதுக்கத்தில் வழக்கம்போல் ஆசி வழங்கி உரையாற்றினார். அதன் நிறைவில், இலங்கை குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:-
பிரார்த்தனைக்காக கூடி இருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடனான எனது நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த கொடிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். பலியான அனைவரையும் இறைவனிடம் ஒப்படைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.