ஈஸ்டர் தாக்குதல் நினைவுநாள்; கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் நினைவுநாள்; கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு
Published on

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது 3 தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை உலகமெங்கும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல்கள் நடந்து 2 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகை நாளில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடாதபடிக்கு கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், தேவாலயங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மூத்த போலீஸ் அதிகாரி அஜித் ரோஹனா தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com