இலங்கை இறுதி கட்ட போரின் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது: சிறிசேனா ஒப்புதல்

இலங்கை இறுதி கட்ட போரின் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதி கட்ட போரின் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது: சிறிசேனா ஒப்புதல்
Published on

கொழும்பு,

இலங்கையில் இறுதிக்கட்டப்பேரின்பேது அரசியல்வாதிகளின் கட்டளையை ஏற்று போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்தது. சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. புள்ளிவிவரம் கூறுகிறது. இலங்கையில் அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே அரசு, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது என்று இலங்கை அதிபர் சிறிசேனா ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இறுதிக்கட்டப்பேரின்பேது அரசியல்வாதிகள் கட்டளையை ஏற்று செயல்பட்ட சில ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

சிறிசேனா மேலும் கூறும் போது, ஆட்சியில் இருந்தவர்களின் (ராஜபக்சே) கவனத்தை ஈர்ப்பதற்காக, ராணுவத்தினர் சிலர் பேர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இதை மனசாட்சியுடன் ஏற்றுக்கெள்ள வேண்டும். இலங்கை ராணுவ வீரர்களில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கை சட்டவிரோதமானது, ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது.

பேரில் நாட்டுக்காக சண்டையிட்டவர்களை ஆளும் கட்சி வேட்டையாடி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இதை நிராகரிக்கிறேன். ராணுவம் தன் மீதுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது. அரசியல்வாதிகளின் கட்டளையை ஏற்று செயல்பட்ட சில அதிகாரிகளிடம் விசாரணை நடப்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போது விசாரணையில் உள்ளவர்கள், குற்றம் செய்யவில்லை என்று தெரியவந்தால் விடுவிக்கப்படுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com