விமானிகள் தொடர்ந்து ராஜினாமா: இலங்கை விமான நிறுவனத்துக்கு நெருக்கடி..!!

விமானிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால் இலங்கை விமான நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பலர் வேலையிழந்ததுடன், வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அரசுக்கு செந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றும் விமானிகளும் சம்பள பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பிரச்சினைகளால் விமானிகள் பணியில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். கொரோனாவுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் 318 விமானிகள் பணியில் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 235 ஆக குறைந்து விட்டது. இது விமான நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு நுடாலும் கவலை தெரிவித்து உள்ளார். கொரோனாவுக்கு பின் இலங்கையின் சுற்றுலாத்துறை படிப்படியாக சீரடைந்து வரும் நிலையில், விமானிகளின் இந்த வெளியேறுதல் அரசுக்கு தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com