ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 8ம் தேதி வரை காவல் - இலங்கை கோர்ட்டு உத்தரவு

கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படை அழைத்து சென்றது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 8ம் தேதி வரை காவல் - இலங்கை கோர்ட்டு உத்தரவு
Published on

கொழும்பு,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. மீன் பிடி தடைக்காலம் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முடிந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் நிலையில், இலங்கை கடற்படையின் அட்டுழியம் மீண்டும் தொடங்கியுள்ளது.

மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி கொண்டு இருந்த போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படை அழைத்து சென்றது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com