

கொழும்பு,
கடும் பொருளாதார நெருக்கடிச் சுழலில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீள வெளிகடனுதவியை, குறிப்பாக இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறது.
இலங்கையில் இந்தியா மேற்கொள்ள எண்ணியுள்ள திட்டங்கள், முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி மந்திரி எஸ்.ஜெய்சங்கருடன் அந்நாட்டு நிதி மந்திரி பசில் ராஜபக்சே கடந்த ஜனவரி மாதம் பேசினார்.
அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக பசில் ராஜபக்சே நேற்று புறப்பட்டார்.
அவர் சுமார் ரூ.7 ஆயிரத்து 500 கோடி கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசுடன் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. இது இலங்கையின் எரிபொருள், உணவு, மருந்துப்பொருட்கள் இறக்குமதி செலவைச் சமாளிக்க உதவும் என்று அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயின் தம்பியான பசில், மந்திரியாக பதியேற்றதும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.