இருதரப்பு பேச்சுவார்த்தை: இலங்கை நிதி மந்திரி இந்தியா வருகை

இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியா வருகை தர உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது. எனினும் அவரது பயண அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை கடனாக கோரியுள்ள நிலையில், அந்த நாட்டு நிதி மந்திரியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com