

கொழும்பு,
இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாவது:- இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் என்றார். பிரபல ஆங்கில நாளிதழில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சிறிசேனாவில் இந்த குற்றச்சாட்டு பெரும் இலங்கை அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெயர் வெளியிட விரும்பாத மந்திரி ஒருவர் கூறும் போது, இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்றார்.