

கொழும்பு,
கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
பிரதமர் ரனில் விக்ரம சிங்கே, கட்சியின் துணைத்தலைவர் சஜித் பிரேமதாசா, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.
இந்தநிலையில், சஜித் பிரேமதாசா (வயது 52) போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இவர் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் ஆவார்.
ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசாவை அதிபர் வேட்பாளராக ஒருமனதாக தேர்ந்து எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.