

எனினும் சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட அந்த இயற்கை உரத்தை ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் அதில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சீன நிறுவனத்திடம் இருந்து 99 ஆயிரம் டன் இயற்கை உரம் வாங்கும் திட்டத்தை இலங்கை அரசு ரத்து செய்தது. ஆனால் உரம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே 20 ஆயிரம் டன் இயற்கை உரத்துடன் சீன கப்பல் இலங்கை நோக்கி புறப்பட்டது. இந்த கப்பல் அக்டோபர் 22-ந் தேதி கொழும்பு துறைமுகம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசு உரம் வாங்கும் திட்டத்தை ரத்து செய்தததால் அந்த கப்பல் இலங்கையின் மலாகா ஜலசந்தியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அசுத்தமான இயற்கை உரத்துடன் இருக்கும் சீன கப்பலை கொழும்பு துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என துறைமுக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த கப்பலை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சீனாவுக்கு பதிலாக இந்தியாவில் இருந்து உரத்தை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.