இலங்கையில் வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வரிகளை உயர்த்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இலங்கையில் வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்
Published on

கொழும்பு,

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்வதால், புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, கடந்த வாரத்தில் பெட்ரொல், டீசலின் விலையை கடுமையாக உயர்த்தி உத்தரவிட்டனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வரிகளை உயர்த்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. தொலைதொடர்பு, பந்தயம், கேமிங், மதிப்புக் கூட்டு வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com