இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்
Published on

கொழும்பு,

இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

தீர்மானத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள 51 உறுப்பினர்களும், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியின் 4 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி கவர்னராக வெளிநாட்டைச் சேர்ந்தவரை பிரதமர் ரணில் நியமித்தார்.இதேபோல், மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பங்குப் பத்திரங்களில் முறைகேடு செய்தோரை பாதுகாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சட்டம்-ஒழுங்குத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதமர் ரணில்,இலங்கையில் இம்மாத தொடக்கத்தில் மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டார்.எனவே, இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான கூட்டணி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

இலங்கையின் கண்டி, அம்பாறை மாவட்டங்களில் அண்மையில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் சூறையாடப்பட்டன. அவர்களது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக, சட்டம்-ஒழுங்கு துறையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இருந்து இலங்கை அதிபர் சிறிசேனா பறித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com