அமெரிக்காவில் நடு வானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 7 பேர் பலி

அமெரிக்காவில் நடு வானில் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் 7 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் நடு வானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 7 பேர் பலி
Published on

அலாஸ்கா,

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியாகியுள்ளனர். அலாஸ்காவின் சால்டோட்டனா விமான நிலையம் அருகே நடு வானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோய் உயிரிழந்தார்.

இந்த விமானத்தை அவரே தனியாக ஒட்டி வந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்துக்குள்ளான மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலாப்பயணிகள், ஒரு வழிகாட்டி, விமானி உள்பட மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com