கிரீஸ்: சாண்டோரினி தீவில் நிலநடுக்கம் - அவசரநிலை பிரகடனம்

கிரீஸ் நாட்டின் சாண்டோரினி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஏதேன்ஸ்,
ஐரோப்பாவின் தென்கிழக்கே பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு கிரீஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுக்கூட்டங்கள் உள்ளன. அந்த வகையில் ஏஜியன் கடல் பகுதியில் கிரீசின் சாண்டோரினி தீவு உள்ளது.
பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் இந்த தீவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சாண்டோரினி தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாண்டோரினி தீவில் இருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் அடுத்த மாதம் 3ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story