அரசுமுறை பயணம்: போர்ச்சுக்கல் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

இந்திய ஜனாதிபதி ஒருவர் போர்ச்சுக்கலுக்கு செல்வது 27 ஆண்டுகளில் இது முதன்முறையாகும்.
அரசுமுறை பயணம்: போர்ச்சுக்கல் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பாவுக்கு சென்ற நிலையில், தனி விமானம் மூலமாக முதலில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றடைந்துள்ளார். பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் ஜனாதிபதியை போர்ச்சுகலில் உள்ள இந்திய தூதர் புனீத் ஆர் குண்டல் மற்றும் இந்தியாவில் உள்ள போர்ச்சுகல் தூதர் ஜோவா ரிபேரோ டி அல்மீடியா ஆகியோர் வரவேற்றனர்.

இந்திய ஜனாதிபதி ஒருவர் போர்ச்சுக்கலுக்கு செல்வது 27 ஆண்டுகளில் இது முதன்முறையாகும். தலைநகர் லிஸ்பனில் அந்த நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ முதலிய உயர்மட்டத் தலைவர்களுடன் ஜனாதிபதி முர்மு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

தனது 2 நாட்கள் பயணத்தை அங்கு முடித்து கொண்டு அடுத்தப்படியாக சுலோவாகியாவுக்கு செல்கிறார். அங்குஅவர் சுலோவாகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராசி ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்த பயணங்களின்போது இந்தியா-போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா இடையே மூலோபாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com