ஜப்பானை புரட்டிப்போட்ட புயல்மழை, வெள்ளம்

புயல் எச்சரிக்கையொட்டி ரெயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பானை புரட்டிப்போட்ட புயல்மழை, வெள்ளம்
Published on

டோக்கியோ,

மெக்கலா, ஹிகோஸ் ஆகிய இரட்டை புயல்கள் ஜப்பானை தாக்கின. இத னால் ஜப்பானில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. யமகுச்சி மாகாணத்தில் நிலச்சரிவினால் வீடு இடிந்து முதியவர் ஒருவர் பலியானார். நாரா, ஹிரோஷிமாவில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

கியோட்டோ, ஒசாகா நகரங்களுக்குப் பெருவெள்ள எச்சரிக்கை விடுக்கப் பட்டு, ரெயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இப்புயல் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டோக்கியோ மற்றும் யமனாஷியில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com