ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை
Published on

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முழுவதும் முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் நடத்திய தொலைபேசி பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு டிரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் போர் முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தள பதிவில் கூறியதாவது:, “அமெரிக்கா, ஈரான் மற்றும் தொடர்புடைய பிற நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் பெரும்பாலும் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்டுள்ளது. எனினும் இறுதி ஒப்புதல் நிலுவையில் உள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனியாக தொலைபேசியில் பேசியதாகவும், அந்த பேச்சுவார்த்தையும் மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகுவுடன் தனியாக பேசியேன். அந்த உரையாடலும் மிகவும் நல்ல முறையில் நடைபெற்றது. ஒப்பந்தத்தின் இறுதி அம்சங்கள் மற்றும் விவரங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்”என்றார்.

மேலும், முன்மொழியப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும்” எனவும் கூறியுள்ளார். அதேநேரத்தில் டிரம்பின் இந்த கருத்தை ஈரான் மறுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை தங்கள் நாடே தொடர்ந்து வைத்திருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், போருக்கு முன்பு இருந்த அளவுக்கு கப்பல்கள் செல்ல அனுமதிக்க மட்டுமே ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com