பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவானது.
பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு
Published on

வெல்லிங்டன்,

தெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகள், அலுவலங்களில் பணியாற்றியவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து எந்த வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com