தென்கொரியாவை தாக்கிய ‘லிங்லிங்’ புயலால் பலத்த சேதம் - 3 பேர் பலி

தென்கொரியாவை தாக்கிய ‘லிங்லிங்’ புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
தென்கொரியாவை தாக்கிய ‘லிங்லிங்’ புயலால் பலத்த சேதம் - 3 பேர் பலி
Published on


* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தேடும் இந்திய வம்சாவளியான பெண் எம்.பி. கமலா ஹாரிஸ், தனது ஆதரவாளர் மத்தியில் பேசியபோது, இந்தியர் ஒருவர், ஜனாதிபதி டிரம்பை மனநலம் குன்றியவர் என கூறினார். அதை கேட்டு கமலா ஹாரிஸ் சிரித்ததோடு சரியாக சொன்னீர்கள் என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கமலா ஹாரிஸ் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

* பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்றத்தில் அரசு தரப்பு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த ஆளும் கட்சி எம்.பி.க்கள் 21 பேரை பதவியில் இருந்து நீக்கியதை கண்டித்தும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பெண் மந்திரி ஆம்பர் ரூத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* தென்கொரியாவை தாக்கிய லிங்லிங் என்ற புயல் அங்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. இந்த புயலுக்கு 3 பேர் பலியாகினர்.

* சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் அல் சவுத், அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com