இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
Published on

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இன்று நண்பகல் 1.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கம் ஜெம்பர் பகுதியில் இருந்து 284 கி.மீ. தென்மேற்கே உணரப்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவிஇயற்பியல் கழகம் அறிவித்து உள்ளது.

எனினும், சுனாமி பேரலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு இந்நிலநடுக்கம் ஆற்றல் கொண்டிருக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com