மாணவிகள் குறித்து சர்ச்சை கருத்து: நேபாள சட்ட மந்திரி ராஜினாமா

நேபாளத்தில் கடந்த 20–ந் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த நாட்டின் சட்ட மந்திரி ஷெர் பகதூர் டாமாங் கலந்து கொண்டு பேசினார்.
மாணவிகள் குறித்து சர்ச்சை கருத்து: நேபாள சட்ட மந்திரி ராஜினாமா
Published on

காட்மாண்டு,

வங்கதேசத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்கிற நேபாள மாணவிகள் சான்றிதழ்களைப் பெறுவதற்காக தங்கள் கவுரவத்தை சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று ஷெர் பகதூர் டாமாங் கூறியதாக தகவல் வெளியானது. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து மந்திரி ஷெர் பகதூர் டாமாங் தனது சர்ச்சைக்கு உரிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை.

இதையடுத்து அவர் பதவி விலகுமாறு பிரதமர் கே.பி. சர்மா ஒலி, முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் ஆகியோர் அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

பதவி விலகிய மந்திரி ஷெர் பகதூர் டாமாங், நேபாள கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

தனது பதவி விலகல் குறித்து நிருபர்களை சந்தித்த அவர், நான் பெண்கள் உரிமைக்காக பல காலம் உழைத்து வந்து உள்ளேன். ஆனால் இப்போது அதே பெண்கள் பிரச்சினையில் என் பதவியை துறக்க வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com