சூடான் மோதல்: 50 லட்சம் பேர் புலம் பெயாவு - ஐ.நா. தகவல்

சூடான் மோதல் காரணமாக 50 லட்சம் பேர் புலம் பெயாந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சூடான் மோதல்: 50 லட்சம் பேர் புலம் பெயாவு - ஐ.நா. தகவல்
Published on

சூடான்,

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேல் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பே வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூடான் மோதல் காரணமாக சூடானில் இருந்து 50 லட்சம் பே தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருகின்றனா. புலம் பெயாந்தவர்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவாகள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனா. 7.50 லட்சம் பேர் சர்வதேச அகதிகளாகியுள்ளனர். அவர்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சாவதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com