

கார்டூமின்,
சூடானில் தங்கச்சுரங்கம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். எகிப்து அருகே அமைந்துள்ள இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, சூடானில் பல்வேறு சட்டவிரோத தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, சூடான் அருகே அமைந்துள்ள நாடு எகிப்து. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப்பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக, எகிப்து - சூடான் எல்லையில் சூடானில் தங்க சுரங்கங்கள் அதிகம் நிறைந்த ஹலைப் டிரையாங்கில் பகுதியை எகிப்து உரிமைகோரி வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள தங்கச்சுரங்கங்களில் சட்டவிரோதமாக தங்கத்தை வெட்டி எடுப்பவர்கள் மீது எகிப்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சூடானில் ஹலைப் டிரையாங்கில் பகுதியில் உள்ள தங்கச்சுரங்கம் மீது இன்று வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எகிப்து இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹலைப் டிரையாங்கில் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத தங்கச்சுரங்கம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து எகிப்து - சூடான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.