சூடானில் உள்நாட்டு போர்: 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம்

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது.
சூடானில் உள்நாட்டு போர்: 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம்
Published on

கார்டூம்,

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவியது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டு போராக வெடித்தது. இந்த போரில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மேலும் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருவதால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு மூன்றில் ஒரு பங்கு பேர் பட்டினியால் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் வருகிற மாதங்களில் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கக்கூடும் என ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே சூடானுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என உலக நாடுகளை ஐ.நா.வலியுறுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com