பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர், ராணுவத்துடன் திடீர் ஆலோசனை

பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர், ராணுவத்துடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.
பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர், ராணுவத்துடன் திடீர் ஆலோசனை
Published on

பியாங்காங்,

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான சமரச பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இருநாடுகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வலுக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். நாட்டின் ராணுவ திறனை மேம்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ திறனின் விரைவான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய ராணுவ அதிகாரிகள் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய நபர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com