இங்கிலாந்தில் வீட்டில் திடீர் வெடிவிபத்து; 2 பேர் பலி

இது பயங்கரவாத செயல் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் வீட்டில் திடீர் வெடிவிபத்து; 2 பேர் பலி
Published on

லண்டன்

இங்கிலாந்து நாட்டின் தெற்கே பிரிஸ்டல் நகரில் ஸ்டெர்ன்கோர்ட் சாலையில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை 6.30 மணியளவில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.

இதனை சாமர்செட் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். வெடிவிபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. சம்பவம் பற்றி அவர்களுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

எனினும், இது பயங்கரவாத செயல் இல்லை என போலீசார் தெரிவித்தனர். அந்த பகுதியை போலீசார், தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com