திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்; 5 பேர் பலி, 558 பேர் மாயம்

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்; 5 பேர் பலி, 558 பேர் மாயம்
Published on

பீஜிங்,

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமய மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் நேற்று முன் தினம் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

5 பேர் பலி

இமயமலையில் பனிப்பாறை உடைப்பு திபெத் - நேபாள எல்லையில் உள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி திபெத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 558 பேர் மாயமாகியுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. மாயமானவர்களில் 260 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

திபெத்தில் உள்ள கையிலாச மலைக்கு யாத்திரை சென்ற இந்தியர்கள் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அதேவேளை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com