அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு: 2 பேர் உயிரிழப்பு; 14 பேர் பலத்த காயம்

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு: 2 பேர் உயிரிழப்பு; 14 பேர் பலத்த காயம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க்கில் ரோசெஸ்டர் நகரில் இன்று காலை விருந்து நிகழ்ச்சி ஒன்று தொடங்கி நடந்து வந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபொழுது, திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில் 16 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் பின்னர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட 2 பேரில் ஒருவர் ஆண். மற்றொருவர் பெண். இருவருக்கும் 18 முதல் 22 வயதுக்குள் இருக்கும்.

அவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர்களை உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் 100க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து அலறியடித்தபடி வெவ்வேறு திசைகளில் தப்பியோடினார்கள்.

இந்த தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்ற விவரம் அறியப்படவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com